தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : ஜன 31, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று தை மாத வெள்ளி பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையோட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு மகா பிரதோஷ வழிபாடு நடந் தது.

கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச் சகர்கள் செய்திருந் தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us