தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு

 மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : ஏப் 15, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சித்திரை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று சித்திரை மாத முதல் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடும் நடந்தது.

இதில், கோவில் கொடிமரம் எதிரே, அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us