ADDED : ஜூன் 29, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் அடுத்த மேரி உழவர் கரையில் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவிலில் நேற்று முன்தினம் சனிப் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஓதுவார்கள், அடியார்கள் மற்றும் பொதுமக்கள் திருவாசக பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, சிவ வாத்தியம் முழங்கி சிவன் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
