தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரதோஷ வழிபாடு 

பிரதோஷ வழிபாடு 

பிரதோஷ வழிபாடு 


ADDED : ஆக 25, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us