ADDED : மே 29, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மூலக்குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மூலக்குளத்தில் மிகவும் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில், நந்தி பகவானுக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, சிவனடியார்கள் திருவாசகம் பாடினர். அதனை தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அயிற்றுார் மகாதேவர் சிவன் கோவில், நாணமேடு ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவில், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் சிவன் கோவில், திருக்காஞ்சி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
