தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்மஸ்ரீ கலைஞருக்கு பாராட்டு

 பத்மஸ்ரீ கலைஞருக்கு பாராட்டு

 பத்மஸ்ரீ கலைஞருக்கு பாராட்டு


ADDED : பிப் 13, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட சிலம்பாட்ட கலைஞர் பழனிவேலுக்கு சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் சிலம்பாட்டக் கலைஞர்பழனிவேல்,53; இவருக்கு, 2026ம் ஆண்டிற்கான நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இவர், 40 ஆயிரம் பேருக்கு மேல் சிலம்பாட்ட கலையை கற்பித்ததற்காக, நாட்டுப்புற கலைப்பிரிவில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அவருக்கு, புதுச்சேரி சட்டசபையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் செல்வம், 'பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள பழனிவேலுக்கு, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சார்பிலும், தனது சார்பிலும் பாராட்டுக்களை' தெரிவித்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us