தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டென்னிஸ் பயிற்சியாளருக்கு பாராட்டு

 டென்னிஸ் பயிற்சியாளருக்கு பாராட்டு

 டென்னிஸ் பயிற்சியாளருக்கு பாராட்டு


ADDED : நவ 13, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் டென்னிஸ் பயிற்சியாளராக பணிபுரியும் அப்பாதுரையின் சாதனைகளை பாராட்டி, மேல்பரிக்கல்பட்டு ஆசிரியர் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது.

கடலுார் அண்ணா வி ளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவிற்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். அருள் ராமலிங்கம் வரவேற்றார். புதுச்சேரி விளையாட்டுத் துறை முன்னாள் உறு ப்பினர் செயலர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

ஒலிம்பிக் கழக முதன்மை செயலாளர் முத்துகேசவலு, விளையாட்டுக் குழும முன் னாள் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஆசிரியர் விஸ்வநாதன் அறக்கட்டளை நிறுவனர் முத்துலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியாளர் மற்றும் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பாராட்டினர். பயிற்சியாளர் அப்பாதுரை ஏற்புரை ஆற்றினார். கிருஷ்ணசாரதி நன்றி கூறினார்.

அப்பாதுரை அளித்த பயிற்சியின் காரணமாக கடலுாரை சார்ந்த மாணவி தமிழ்விழி கடந்த 2024ம் ஆண்டு சீனாவில் நடந்த உலக சாப்ட் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று, கால் இறுதி போட்டி வரை முன்னேறி சாதனை புரிந்து குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us