/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெற்பயிர் முன் பருவ சாகுபடி பயிற்சி முகாம்
/
நெற்பயிர் முன் பருவ சாகுபடி பயிற்சி முகாம்
ADDED : பிப் 28, 2024 11:00 PM
நெட்டப்பாக்கம்: வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், நவரைநெற்பயிர் முன் பருவ சாகுபடிபயிற்சி முகாம்,கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகத்தில் நடந்தது.
மருத்துவர் செல்வமுத்து வரவேற்றார். பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் வல்லுநர் ரவி, நவரை போகத்தில் விவசாயிகள் உழவியல் மேலாண்மை,உரமேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து விளக்கினார். பூச்சியில் துறை வல்லுனர் விஜயகுமார் விதை நேர்த்தி எவ்வாறு செய்வது, நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு உழவியல் மேலாண்மை குறித்த கையேடு வழங்கப்பட்டது.
பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவர்கள் விதை நேர்த்தி எவ்வாறு செய்வது, மருந்து தெளிப்பதனால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய கண் மற்றும் தோல் நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கினர். செயல் விளக்க உதவியாளர் குமணன், தம்பு சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

