/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிமியர் கிரிக்கெட்: 30ம் தேதி ஏலம்
/
பிரிமியர் கிரிக்கெட்: 30ம் தேதி ஏலம்
ADDED : நவ 27, 2024 11:21 PM
அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில், பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் நாளை மறுநாள் நடக்கிறது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் சார்பில், மூன்றாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி தவளக்குப்பத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏலம், நாளை மறுநாள் 30ம் தேதி, தவளக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடக்கிறது. இந்த ஏலத்தில், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், காட்டுப்பாளையம், கொருக்குமேடு, நல்லவாடு, காட்டுக்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட 10 கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த போட்டியில், முதல் பரிசாக 60 ஆயிரம், இரண்டாம் பரிசாக 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தகவலை, தவளக்குப்பம் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தும் ஒருங்கிணைப்பாளர், உதயா தெரிவித்துள்ளார்.