பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு அணி ஹாட்ரிக் வெற்றி
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு அணி ஹாட்ரிக் வெற்றி
ADDED : ஜூலை 12, 2026 03:42 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
ஸ்ரீராம் கேபிடல் வழங்கும், பாண்டிச்சேரி பிரீமியர் லிக்கின் மூன்றாவது சீசன் துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில்நடந்து வருகிறது. நேற்று நடந்த 8வது லீக் போட்டியில் ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி, ரூபி ஒயிட் டவுன் லெஜெண்ட்ஸ் அணி மோதின.
டாஸ் வென்ற ஒயிட் டவுண் அணி முதலில் பந்து வீசியது. முதலில் களமிறங்கிய ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜஸ்வந்த் ஸ்ரீராம் 10, குஷ்வந்த் சிலோரா 10, ரன் எடுத்து ஆட்மிழந்தார். தொடர்ந்து ராஜசேகர் ரெட்டி 22, நிதின் பிரணவ் 3 ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அந்த அணியில் சாகர் திரிவேதி, தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாக ஆடினர். சாகர் திரிவேதி 23 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானர். தாமரை கண்ணன் 25 ரன்கள் எடுத்தார். ஊசுடு அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய ரூபி ஒயிட் டவுன் லெஜெண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நெயன் காங்கேயன் 24, ஆயுத் சர்மா 14 ரன்கள் எடுத்தனர். அடுத்த வந்த பரத் ராவத் 9 ரன்னில் அவுட்டானர். பிரேம்ராஜா 49, தர்ஷன் 61 ரன்கள் எடுத்தனர். இருப்பினும் இந்த அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டும் எடுத்தது.
ஊசுடு அக்கார்டு வாரியர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஊசுடு அணியின் சாகர் திரிவேதி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் ஊசுடு அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
