/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜன 23, 2025 05:30 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் பிரீமியர் லீக், கிரிக்கெட் போட்டியில், வாரியார்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீராம், நுாறு ரன்கள் எடுத்து, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தவளக்குப்பம் பிரீமியர் லீக் சார்பில், 3ம் ஆண்டு கிரிக்கெட்டி போட்டி, கடந்த 18ம் தேதி தவளக்குப்பம் தனியார் டீத்துாள் மைதானத்தில், துவங்கியது. இந்த போட்டியில், 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் போட்டியில், கிங்ஸ் அணி மற்றும் வாரியர்ஸ் அணி மோதின. வாரியர்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த ஸ்ரீராம், நுாறு ரன்கள் எடுத்து, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஆட்டத்தில், டைட்டன்ஸ் அணி, சோல்ஜர்ஸ் அணி மோதின. இதில், 37 ரன்கள் வித்தியாசத்தில் டைட்டன் அணி வெற்றி பெற்றது. 19ம் தேதி நடந்த போட்டியில், ஸ்டைக்கர்ஸ் அணியினரும், ஸ்பார்ட்டன்ஸ் அணியினரும் மோதின. இதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்பார்டன் அணி வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில், ஸ்பைட்டர் அணி, தி கிளாடியேட்டர் அணி மோதின. இதில், பைட்டர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.