/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
ADDED : பிப் 13, 2025 05:01 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அபிஷேகப்பாக்கம் சாலை, தனியார் டீத்துாள் கம்பெனி அருகே உள்ள மைதானத்தில் தவளக்குப்பம் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
பூரணாங்குப்பம், தவளக்குப்பம் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. கடந்த 8ம் தேதி, காலையில் நடந்த போட்டியில், பைட்டர்ஸ் அணியும், வாரியர்ஸ் அணியும் மோதின. இதில், 16 ரன்கள் வித்தியாசத்தில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
அன்று மதியம் நடந்த போட்டியில், சோல்ஜர்ஸ் அணியும், ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், 26 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்டைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. 9ம் தேதி, காலை நடந்த போட்டியில், டைட்டன்ஸ் அணியும், வாரியர்ஸ் அணியும் மோதின. அதில், வாரியர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்று மதியம் நடந்த போட்டியில், கிங்ஸ் அணியும், பைட்டர்ஸ் அணியும் மோதின.
இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பைட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது. அதில், சிறந்த ஆட்டநாயகனாக ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வீரர் அஜித்குமார், தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் மூன்று விக்கெட் எடுத்ததோடு, பேட்டிங்கிலும் 58 ரன்கள் எடுத்துள்ளார்.