/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
/
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி
ADDED : பிப் 20, 2025 06:31 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, அபிேஷகப்பாக்கம் சாலை, தனியார் கம்பெனி அருகே நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரம் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடக்கும் போட்டியில், தவளக்குப்பம், பூராணங்குப்பம் உள்ளிட்ட 10 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன.
கடந்த 15ம் தேதி, காலையில் நடந்த போட்டியில் சோல்ஜர்ஸ் அணி, ஸ்மாஷ்ர்ஸ் அணியும் மோதின. இதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்மாஷ்ர்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, மதியத்தில் நடந்த போட்டியில், ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, பேட்டரி ஆர்ட்ஸ் அணியும் மோதின. இதில் 58 ரன்கள் வித்தியாசத்தில், ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது.
மறுநாள் 16ம் தேதி, காலையில் நடந்த போட்டியில் வாரியர்ஸ் அணி, கிளாடியேட்டர் அணியும் மோதின. அதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. மதியம் நடந்த போட்டியில் டைட்டன்ஸ் அணி, ஸ்பார்ட்டன் அணியும் மோதின. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்பார்ட்டன் அணி வெற்றி பெற்றது.
இதில், சோல்ஜர்ஸ் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரகு, 63 பந்துகளில், 96 ரன்கள், ஒரு விக்கெட் எடுத்து, இந்த வார, சிறந்த ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியை நடத்தி வரும், தவளக்குப்பம் பிரீமியர் கிரிக்கெட் அணி சார்பில், ஒருங்கிணைப்பாளர் உதயா, வீரர் ரகுவை பாராட்டினார்.

