/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி சபாநாயகர் துவக்கி வைப்பு
/
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி சபாநாயகர் துவக்கி வைப்பு
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி சபாநாயகர் துவக்கி வைப்பு
பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி சபாநாயகர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 19, 2025 06:11 AM

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் பிரிமியர் லீக் 3ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி, சிங்கிரிகுடி அடுத்த தனியார் டீத்துாள் கம்பெனி விளையாட்டு திடலில், நேற்று துவங்கியது.
சிறப்பு விருந்தினர் சபாநாயகர் செல்வம், பேட்டிங் செய்து, போட்டியை துவக்கி வைத்தார்.
தாகூர் அரசு கலைக் கல்லுாரியின் வேதியியல் துறை தலைவர் பாலமுருகன், சக்திமுருகன் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் நடராஜன், ரிவர் வியூ ரிசார்ட் பிரித்விராஜன், மாவட்ட பா.ஜ., தலைவர் சுகுமாறன், யுனைடெட் கிரிக்கெட் கிளப் நிறுவனர் தனசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
போட்டியில், பூரணாங்குப்பம், தவளக்குப்பம், காட்டுப்பாளையம், கொருக்குமேடு, நல்லவாடு, காட்டுக்குப்பம், தானாம்பாளையம் உள்ளிட்ட 10 கிரிக்கெட் அணிகள் விளையாடுகிறது.
போட்டியில் வெற்றி பெறும், அணிகளுக்கு, முதல் பரிசாக 60 ஆயிரம், இரண்டாம் பரிசாக 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்தகவலை, தவளக்குப்பம் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் உதயா தெரிவித்தார்.