/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2025 08:40 AM

புதுச்சேரி : வில்லியனுார் சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில், தினமலர் - பட்டம் இதழை, பள்ளி முதல்வர் காயத்ரி மாணவர்களுக்கு வழங்கினார்.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, வரலாற்று செய்திகள், தற்போதிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், தினமலர் மாணவர் பாதிப்பு பட்டம், இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
வில்லியனுார் ஸ்ரீ சம்பூர்ண வித்யாலயம் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் காயத்ரி தலைமை தாங்கி, இந்த கல்வியாண்டு முழுதும், மாணவர்களுக்கு பட்டம் இதழை, மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.