/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் முதல்வரிடம் வழங்கல்
/
ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் முதல்வரிடம் வழங்கல்
ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் முதல்வரிடம் வழங்கல்
ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் முதல்வரிடம் வழங்கல்
ADDED : பிப் 17, 2024 05:07 AM

புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதத்தை செண்டலங்கார செண்பக இராமானுஜ ஜீயர், முதல்வர் ரங்கசாமியிடம் நேற்று வழங்கினார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது.
அதையொட்டி, அன்றைய தினம் புதுச்சேரியில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, கோவில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் கும்பாபிஷேக விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பார்வையிட்டனர்.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேக பிரசாதத்தை மன்னார்குடி செண்டலங்கார செண்பக இராமானுஜ ஜீயர், நேற்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வழங்கினார்.
அப்போது, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.