தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

 பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி

 பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 24, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளியளவில் மாணவி ஷிவானி கார்னிவால் 500க்கு 488 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி பேன்சி மரியா 485 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சோபியா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பள்ளியில் தேர்வு எழுதிய 141 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக பிரெஞ்சு பாடத்தில் ஒரு மாணவரும், சமூக அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பள்ளியளவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, பள்ளி செயலாளர் கவுதம் ஆகியோர் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்.

சமூக அறிவியல் பாடத்தில் மாநில அளவில் இப்பள்ளி மாணவர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us