/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை
/
பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 16, 2025 03:08 AM

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த அணி வகுப்பிற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பில் நடந்த 79வது சுதந்திர தின விழா அணிவகுப்பில் அனைத்துப் பிரிவுகளிலும் ரெட்டியார் பாளையம் பிரசிடென்சி மற்றும் பிரசிடென்சி (எலைட்) பள்ளியைச் சார்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கான அணி வகுப்பில் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறந்த அணி வகுப்பிற்கான முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். அவர்களை பள்ளித் தாளாளர் கிறிஷ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், பள்ளி செயலர் கவுதம் ஆகியோர் பாராட்டினர்.

