ADDED : ஆக 15, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி ஐ.ஜி., உள்பட மூன்று பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை போன்றவற்றில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஜனாதிபதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி.அஜித்குமார் சிங்லா, மாகி போலீஸ் எஸ்.பி., சரவணன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.