தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பல்கலை.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி பல்கலை.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி பல்கலை.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து


ADDED : பிப் 07, 2024 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழக்தில் மூன்று நாள் ஜி-20 நுாலக உச்சி மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டை நடத்தும் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜி-20 நுாலக உச்சி மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

புத்தகங்கள் மனிதகுலத்தின் சிறந்த நண்பர்களாக கருதப்படுகின்றன.

அவை தத்துவம், மொழி, இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான கல்வி ஆழத்தை ஆராய்வதற்கும் நமது அறிவார்ந்த ஆற்றலை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.

மாறிவரும் காலத்திற்கேற்ப, நமது நுாலகங்கள், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாசகர்களின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன.

ஜி-20 நுாலக உச்சிமாநாடு பல்வேறு நாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது அனைவருக்கும் ஒரு வளமான அனுபவமாக இருக்கும்.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், நுாலகர்கள் மற்றும் கள வல்லுநர்கள் ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நுாலக மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்.

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us