பிரதமர் மோடிக்கு வரவேற்பு : சபாநாயகர் செல்வம் அழைப்பு
பிரதமர் மோடிக்கு வரவேற்பு : சபாநாயகர் செல்வம் அழைப்பு
ADDED : மார் 01, 2026 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வரும் தாய்மார்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசின் விதிகளின்படி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூர்மையான பொருட்கள, தலைமுடிக்கு வைக்கும் 'ஹேர் பின்', சேலைக்கு குத்தும் 'ஊக்கு' போன்ற கூர்மையான பொருட்களை அணிந்து வரக்கூடாது. கைப்பைகளை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும்.
கருப்பு நிற ஆடைகள் அல்லது கருப்பு நிறம் சார்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது. லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடக்கும் விழாவில், 15 ஆயிரம் தாய்மார்கள் உட்பட மொத்தம் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மக்கள் அதிகம் கூடும் வசதி கொண்ட ஹெலிபேடு மைதானம் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2018 ல் இதே இடத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடந்தது. நாளை காலை 11:40 மணிக்கு விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிபேடு மைதானத்திற்கு வருவார். அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து உரையாற்றுகிறார்.
மதியம் 1:00 மணிக்கு தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புவார். புதுச்சேரியை மீண்டும் 'பெஸ்ட் புதுச்சேரியாக' மாற்றும் இந்த முயற்சியில், அனைத்து தரப்பு மக்களும் திரளாகக் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்' என்றார்.
