/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை
/
பிரதமர் மோடி புதுச்சேரி வருகை
ADDED : மார் 17, 2026 04:18 AM
புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி புதுச்சேரி வர உள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;
மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று மாலை (நேற்று) புதுச்சேரிக்கு வருகிறார். கட்சி மேலிடத்தின் அழைப்பின் பேரில், நான், சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நாளை (இன்று) டில்லி செல்கிறோம். தேர்தல் பணிகள் குறித்து அங்கு முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது.பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வர உள்ளார். அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை.தேர்தல் தேதி இவ்வளவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம். ஓரிரு நாளில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாராகிவிடும்.
தற்போதைய நிலவரப்படி, என்.ஆர்.காங். - பா.ஜ., கூட்டணி முறையே 16 - 14 என்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சி தலைமை இறுதி முடிவு செய்யும் என்றார்.

