/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை :இந்திரா காந்தி மைதானம் சீரமைப்பு
/
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை :இந்திரா காந்தி மைதானம் சீரமைப்பு
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை :இந்திரா காந்தி மைதானம் சீரமைப்பு
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை :இந்திரா காந்தி மைதானம் சீரமைப்பு
ADDED : பிப் 12, 2026 04:46 AM

புதுச்சேரி: பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகையை முன்னிட்டு, உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
புதுச்சேரிக்கு கடந்த 20 21ம் ஆண்டு பிப்ரவரியில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, உப்பளம், இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக்ட்ராக் அமைக்க அடிக்கல் நாட்டினார்.
தொட ர்ந்து, மேம்பாட்டு பணிகளும், நடந்து வந்த ன. சுற்றிலும் தடகளத்திற்கான சிந்தடிக் ட்ராக் முழுதுமாக போடப்பட்ட நிலையில் மேம்பாட்டு பணிகளில் தொய்வுஏற்பட்டது. பணிகள் முழுமை பெறாமல் மைதானத்தில் உள்ள ஓடுதளத்தில் அதிநவீன சிந்தடிக் ட்ராக் மட்டும் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி விரைவில் புதுச்சேரிக்கு வர இருக்கிறார். மோடி வரும்போது, இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிந்தடிக் ட்ராக்கை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறார்.
இதனால் மைதானத்தாத்தில் மண்டியிருந்த புற்கள் மற்றும் செடிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிந்தடிக் டிராக்கை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பழைய இரும்பு வேலிகளை அகற்றிவருகின்றனர்.
புதிதாக உயரம் அதிகபடுத்தப்பட்ட வேலிகள் அமைத்தல், கேலரிகளில் உள்ள கூரைகளை அகற்றி விட்டு பு திய கூரைகள் அமைக்கப்பட உள்ளது. மைதானத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதி துாய்மைப்படுத்தப்பட்டு, பெயிண்ட் அடித்தல் மற்றும் சேதமடைந்த கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் என இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகி றது.

