sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பிரதமர் மார்ச் 1ல் புதுச்சேரி வருகை

/

 பிரதமர் மார்ச் 1ல் புதுச்சேரி வருகை

 பிரதமர் மார்ச் 1ல் புதுச்சேரி வருகை

 பிரதமர் மார்ச் 1ல் புதுச்சேரி வருகை

1


ADDED : பிப் 12, 2026 01:49 AM

Google News

ADDED : பிப் 12, 2026 01:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பிரதமர் மோடி, மார்ச் 1ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், தற்போதைய என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது.

அதையொட்டி, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை வரவழைத்து, அரசு விழா நடத்தி, மத்திய -- மாநில அரசுகள் சார்பில் மெகா திட்டங்களை அறிவிக்க பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, இன்று 12ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 14, 16 மற்றும் 21ம் தேதிகள் என மாற்றி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வில்லியனுாரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடி புதுச்சேரி வருகை எப்போது என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வருகைக்கு முன்பாக கூட்டணியில் தொகுதி பங்கீடுகளை பேசி முடிவு செய்து, பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகளை பா.ஜ., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us