/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழா
/
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழா
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழா
பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் துவக்க விழா
ADDED : ஏப் 16, 2025 10:27 PM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம் மற்றும் மீனவர்களுக்கான நிதியுதவி ஆணை வழங்கும் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார்.மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் கலந்து கொண்டு, மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்து, மீனவ பயனாளிகளுக்கு நிதியுதவிக்கான ஆணையைவழங்கினார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,தேனீ ஜெயக்குமார், திருமுருகன், செல்வகணபதி எம்.பி., முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், லட்சுமி காந்தன், பிரகாஷ்குமார், செயலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் முகமது இஸ்மாயில் நன்றி கூறினார்.
விழாவில், மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நரம்பை மீனவ கிராமத்தில் காலநிலை தாங்கும் கரையோர மீனவர் கிராமங்கள் துவங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அலங்கார மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க 12 பயனாளிகளுக்கு ரூ.19.20 லட்சம் மானியம், புதிதாக 1000 மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.