/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
/
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் நாளை விழிப்புணர்வு முகாம்
ADDED : மே 17, 2025 12:16 AM
புதுச்சேரி: பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நளை நடக்கிறது.
புதுச்சேரி மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில், பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க முகாம் நாளை 18ம் தேதி லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் மின்நுகர்வோர் கலந்து கொள்ளலாம்.
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்து முழுவதுமாக தெரிந்துகொண்டு தங்களது வீடுகளில் நிறுவலாம்.
முகாமில் பங்கேற்க வரும்போது தங்களது மின் கட்டண அட்டவணை நகலை அவசியம் எடுத்து வர வேண்டும்.பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தினை பொருத்தவரை முதலீடுகளில் 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் பெறலாம். உடனடியாக அனுமதியும் கிடைக்கும்.
குறைந்தபட்ச பராமரிப்பில் 25 ஆண்டுகால மின் உற்பத்தி நிச்சயம் கிடைக்கும். 5 ஆண்டுகள் இலவசர பராமரிப்பு உத்திரவாதமும் அளிக்கப்படுகிறது. செலவிடப்படும் தொகையில் 5 ஆண்டுகளில் சூரிய மின் உற்பத்தி மூலம் திரும்ப பெற்றுவிட முடியும்.
பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே குடையின் கீழ் விளக்கமும், தீர்வும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மின் நுகர்வோர் அவசியம் இந்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்க வேண்டும் என,மின் துறை அழைப்பு விடுத்துள்ளது.