/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமரின் சூரிய மின் விளக்கு திட்டம்; கரிக்கலாம்பாக்கத்தில் நாளை முகாம்
/
பிரதமரின் சூரிய மின் விளக்கு திட்டம்; கரிக்கலாம்பாக்கத்தில் நாளை முகாம்
பிரதமரின் சூரிய மின் விளக்கு திட்டம்; கரிக்கலாம்பாக்கத்தில் நாளை முகாம்
பிரதமரின் சூரிய மின் விளக்கு திட்டம்; கரிக்கலாம்பாக்கத்தில் நாளை முகாம்
ADDED : ஜூன் 20, 2025 02:03 AM
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் நாளை, பிரதமரின் சூரிய மின் விளக்கு திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில், வீட்டின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் நிலையம் நிறுவுவதன் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக கரிக்கலாம்பாக்கம் ராஜிவ்காந்தி திருமண நிலையத்தில் நாளை (21ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, சூரிய மின் விளக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கான முகாம் நடக்கிறது.
இத்திட்டத்தில் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட்டிற்கு ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,074 பேர் தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவி உள்ளனர். இவர்களுக்கு ரூ.7.4 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கரிக்கலாம்பாக்கத்தில் இன்று நடக்கும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று திட்டத்தின் பயன்களை அறிந்து கொண்டு, திட்டத்தில் சேர்ந்து பயனடைய மின்துறை அழைக்கிறது.
திட்டம் குறித்த மேலும் விபரங்கள் அல்லது வழிகாட்டுதலுக்கு 94890 80373, 98940 80374 என்ற மொபைல் போன் எண்களிலோ அல்லது ee2ped@py.gov.in என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.