/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜவகர் பள்ளிக்கு முதல்வர் விருது
/
ஜவகர் பள்ளிக்கு முதல்வர் விருது
ADDED : ஜன 30, 2024 04:22 AM

வில்லியனுார் : குடியரசு தின விழாவில் கூடப்பாக்கம் ஜவகர் ஆங்கில மேல்நிலைப் பள்ளிக்கு கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் விருது வழங்கினார்.
கூடப்பாக்கம் ஜவகர் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மற்றும் வில்லியனுார் சிவகணபதி நகரில் உள்ள ஜவகர் வித்யா நிகேதன் உயர்நிலைப் பள்ளி சார்பில் கடந்த 2022-23ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்விற்கு அதிக மாணவர்களை அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இரு பள்ளிகளின் சாதனையை பாராட்டி குடியரசு தின விழாவில் கவர்னர் தமிழிசை, பள்ளி நிர்வாகி இராமசிவராஜனிடம் தனித் தனியாக இரு முதலமைச்சர் விருதுகள் மற்றும் சுழற்கேடயங்களை வழங்கி பாராட்டினர்.
இது குறித்து பள்ளி நிர்வாகி இராமசிவராஜன் கூறியதாவது:
எங்கள் இரு பள்ளிகளும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு கிராம பகுதியில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. அரசு சார்பில் வழங்கி உள்ள 'முதலமைச்சர் விருது' வருங்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க ஊக்கமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.