/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் விருதுபெற்ற ேஹாலி பிளவர்ஸ் பள்ளி
/
முதல்வர் விருதுபெற்ற ேஹாலி பிளவர்ஸ் பள்ளி
ADDED : ஜன 30, 2024 03:49 AM

திருபுவனை : புதுச்சேரி கரியமாணிக்கம் ேஹாலிபிளவர்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான முதல்வர் ் விருதை கவர்னர் தமிழிசை வழங்கினார்.
புதுச்சேரி கரியமாணிக்கம் ேஹாலிபிளவர்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலும் இப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 26ம் தேதி புதுச்சேரியில் நடந்த குடியரசு தின விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மாணவர்களை தேர்வுக்கு அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக சிறந்த பள்ளிக்கான முதல்வர் விருது மற்றும் கல்வி அமைச்சர் விருதை புதுச்சேரி கவர்னர் தமிழிசை வழங்க, அதை ேஹாலிபிளவர்ஸ் கல்வி நிறுவனங்களின் சேர்மன்வெங்கடேசன் பெற்றுக்கொண்டார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விருது பெற்ற சேர்மனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.