/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பேச்சு திறமையை வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்' மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

ADDED : நவ 15, 2024 03:58 AM
புதுச்சேரி:ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
கருவடிக்குப்பம், காமராஜர் மணிமண்டபத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமாக வரவேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப பள்ளியில் கிடைக்கக்கூடிய கல்வி தரமானதாக இருந்தால் உயர் கல்வி எளிதாக இருக்கும். பள்ளிப்படிப்பை மாணவர்கள் சிறந்த முறையில் படிக்க வேண்டும். ஆசிரியருக்கும் நமது பெற்றோருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தர வேண்டும் என, எண்ணி படிக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் சரளமாக அச்சமின்றி பேசுவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பல குழந்தைகளுக்கு திறமை இருக்கும். அதனால் அதை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் இருக்காது. பேச்சு திறமையை வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். திறமையான மாணவர்களை உருவாக்குவதற்கான அனைத்து வசதிகளையும் பள்ளிகளில் அரசு செய்து வருகிறது.
புதுச்சேரி உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதைப்பற்றிய செய்திகளை எல்லாம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.