தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறந்த குழந்தைகளுக்கு முதல்வர் விருது வழங்கல்

சிறந்த குழந்தைகளுக்கு முதல்வர் விருது வழங்கல்

சிறந்த குழந்தைகளுக்கு முதல்வர் விருது வழங்கல்


ADDED : நவ 15, 2024 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சிறந்த படைப்பாளி குழந்தைகளுக்கு முதல்வர் ரங்கசாமி விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், குழந்தைகள் தின விழா, இ.சி.ஆர், காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி முதன்மை விருந்தினராக பங்கேற்று,சிறந்த படைப்பாளி குழந்தைகளுக்கு விருதுகள்மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் பள்ளிகள் தொடங்கவும், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., அங்கீகாரம் பெறவும், தேசிய தகவலியல் மையம் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இணையதளத்தை துவக்கி வைத்தார்.

சபாநாயகர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் விழாவிற்குத் தலைமை தாங்கி,போட்டிகளில் மண்டல அளவில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்வித்துறை மூலம், இந்தாண்டு பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும், 6ம் வகுப்புக்கான புதுச்சேரியின் வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது.

இதில், ரமேஷ் எம்.எல்.ஏ., பள்ளிக் கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us