/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைதி தாக்கியதில் சிறைக்காவலர் காயம்
/
கைதி தாக்கியதில் சிறைக்காவலர் காயம்
ADDED : செப் 01, 2025 06:56 AM
புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில், கைதி தாக்கியதில் சிறைக்காவலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த சிறைக்காவலர் கிருஷ்ண பிரசாத், கைதிகளை சாப்பிட அழைத்துள்ளார்.
கைதிகள் கூட்டமாக வந்ததால், வரிசையில் வரும்படி தெரிவித்துள்ளார். இதில், கோபமடைந்ததிருபுவனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் 2021ம் ஆண்டு கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதி சேகர் (எ) தனசேகர், திடீரென அங்கிருந்த இரும்பு குவளையால் சிறைக்காவலர் கிருஷ்ண பிரசாத்தை தாக்கியுள்ளார்.
இதில், தலையில் தாக்கியதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்த கிருஷ்ண பிரசாத்தை, மற்ற சிறைக்காவலர்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.