/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்
/
புதுச்சேரி சிறையில் கைதிகள் கோஷ்டி மோதல்
ADDED : டிச 31, 2024 04:37 AM
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகள் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில், வில்லியனுார் பா.ஜ., பிரமுகர் செந்தில்குமார் கொலை வழக்கில் கைதான வில்லியனுார் நித்தியானந்தம் தரப்பினருக்கும், திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் கைதான ஜனா தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சிறை வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிறை காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காலாப்பட்டு போலீசில் நித்தியானந்தம், ஜனா தரப்பினர் மீது புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் 13 பேர் மீது சிறை விதிகளை மீறி செயல்பட்டதாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.