/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி
/
காரைக்கால் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி
ADDED : செப் 25, 2024 04:07 AM
காரைக்கால்: காரைக்காலில் காதலியை கொலை செய்த ஆயுள் தண்டனை கைதி சிறை தற்கொலைக்கு முயற்சித்தவரை மீட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரைக்காலில் கிளை சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு சம்பவத்தில் ஈடுப்பட்ட தண்டனை கைதி,விசாரணை கைதிகள் என சுமார் 30 மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் காதலி மற்றும் அவரது தந்தை ஆகியோரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த அமலன், 45; காரைக்கால் சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.
சிறையில் இவருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று சில கைதிகளை தனது கட்டுப்பாட்டி வைத்துள்ளார். இதனால் இவர் மீது பல்வேறு புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கைதி அமலன் தன்னை புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று சிறை அதிகாரியிடம் பலமுறை வாக்குவாதத்தை ஈடுபட்டுள்ளார். இதனால் நேற்று மதியம் புதுச்சேரி சிறைக்கு மாற்ற வேண்டும் என்று மனவேதனையில் தினம் சிறையில் மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரைகளை விழுங்கி. தற்கொலைக்க முயன்றார். வைத்து கொண்டு மாத்திரையை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதை அறிந்த சிறை போலீசார் அமலனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தண்டனை கைதி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கிளை சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.