தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டிரைவர் மீது பயணி சாய்ந்ததால் தனியார் பஸ் சுவரில் மோதி விபத்து

டிரைவர் மீது பயணி சாய்ந்ததால் தனியார் பஸ் சுவரில் மோதி விபத்து

டிரைவர் மீது பயணி சாய்ந்ததால் தனியார் பஸ் சுவரில் மோதி விபத்து


ADDED : அக் 29, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அருகே டிரைவர் மீது சாய்ந்த பயணியால், கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ், வீட்டின் மதில் சுவரில் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மடுகரையில் இருந்து இன்று (அக்.,29) காலை புதுச்சேரி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை, மடுகரை அடுத்த சொக்கம்பட்டை சேர்ந்த சதாசிவம் 44; என்பவர் ஓட்டிச் சென்றார். அபிஷேகப்பாக்கத்தில் உள்ள சாலை வளைவில் பஸ் சென்ற போது, முன் பக்கத்தில் கியர் பாக்ஸ் மீது அமர்ந்த வந்த பயணி ஒருவர் நிலை தடுமாறி, டிரைவர் மீது விழுந்தார்.

இதனால், டிரைவரால் ஸ்டீயரிங்கை முறையாக திருப்ப முடியாமல் போனதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த வீட்டின் மதில் சுவர் மீது மோதியது. மதில் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த கார் மற்றும் பைக்கும் சேதமானது.

பஸ்சில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் மற்றும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த கர்ப்பிணியை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சி.சி.டி.வி., காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us