ADDED : மே 15, 2025 02:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமான தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் தேடி வருகின்றன்.
திருப்பூரை சேர்ந்தவர் ராஜா, 46. இவர் மனைவி ஜோதியுடன், புதுச்சேரி ஐயங்குட்டிப்பாளையம் கோபாலன் கடைவீதியில் வாடகை வீட்டில் தங்கி, குருமாம்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ராஜாவிற்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது. இதனால் தான் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்தில் இழந்து வந்தாா். சிறுநீரக கோளாறு காரணாமாக டயாலிசிஸ் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். நேற்று முன்தினம் ராஜா, மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.
பணம் இல்லை என கூறிவிட்டு கடை வேலைக்கு சென்று விட்டார். மதியம் திரும்ப வந்து பார்த்தபோது கணவர் ராஜாவை காணவில்லை. விசாரித்தபோது, வீட்டின் உரிமையாளரிடம் ரூ.500 கடன் வாங்கிச் சென்றிருப்பதும், மேலும், டைரியில் வீட்டைவிட்டு செல்வதாக எழுதி வைத்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை தேடி வருகின்றனர்.