/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன ஊழியர் கடன் தொல்லையால் தீக்குளிப்பு
/
தனியார் நிறுவன ஊழியர் கடன் தொல்லையால் தீக்குளிப்பு
தனியார் நிறுவன ஊழியர் கடன் தொல்லையால் தீக்குளிப்பு
தனியார் நிறுவன ஊழியர் கடன் தொல்லையால் தீக்குளிப்பு
ADDED : அக் 26, 2024 06:19 AM

வில்லியனுார்: கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேல்நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜகணேஷ், 40; இவர் சேதராப்பட்டு அடுத்த கரசூரில் வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
ராஜகணேஷ் சில மாதங் களுக்கு முன்பு அப்பள கம்பெனி திறக்க உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அவர்கள் தற்போது கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நேற்று காலை கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த ராஜகணேஷ், சேதராப்பட்டு ஏரிக்கரை பகுதியில் ஆலமரம் கீழ் பைக்கை நிறுத்திவிட்டு, பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். இவரின் அலரல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராஜகணேசனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சேதரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.