/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் ஊழியர் பைக் விபத்தில் பலி
/
தனியார் ஊழியர் பைக் விபத்தில் பலி
ADDED : ஜூலை 30, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடலுார் அடுத்த திருவந்திபுரம், திருப்பதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 36; தனியார் பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர். இவருக்கு, பிரியதர்ஷினி என்கிற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
ஸ்ரீதர் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்றபோது, குருவிநத்தம் சாலையில் போடப்பட்டிருந்த எள்ளு செடி போரின் மீது மோதினார்.
இதில், நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்த அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

