/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுப் பள்ளியில் பரிசளிப்பு விழா
/
அரசுப் பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : ஆக 14, 2025 11:54 PM

நெட்டப்பாக்கம்: சேதாரப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
சேதராப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாடல் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல், வாய்ப்பாடு, கதை கூறுதல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி கல்வித்துறை வட்டம் 5 பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின் சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதலின் படி பள்ளியில் சர்க்கரை பலகையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியை ஹேமமாலினி, ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.