தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கதிர்காமம் தொகுதியில் கோலப்போட்டி பரிசளிப்பு

கதிர்காமம் தொகுதியில் கோலப்போட்டி பரிசளிப்பு

கதிர்காமம் தொகுதியில் கோலப்போட்டி பரிசளிப்பு


ADDED : ஜன 19, 2024 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, -கே.எஸ்.பி., அறக்கட்டளை மற்றும் என்.ஆர்.காங்., கதிர்காமம் தொகுதி சார்பில் பொங்கல் தின கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. சாலையில் நடந்த கோலப்போட்டியில், கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சண்முகாபுரம் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் உள்ள கலையரங்கில் நடந்தது.

முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். கே.எஸ்.பி. அறக்கட்டளை தலைவர் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கோலப்போட்டியில் முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், 32 இன்ச் எல்.இ.டி. டி.வி, பட்டு புடவை, 2ம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், 32 இன்ச் டி.வி., பட்டு புடவை, 3ம் பரிசாக 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி நாணயம், பட்டு புடவை உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

சிறுவர் பூங்கா திறப்பு


மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலையில் களம் காத்த கருமரியம்மன் கோவில் எதிரில் அமைந்துள்ள என்.ஆர்., சிறுவர் பூங்காவை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us