/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : நவ 20, 2025 06:02 AM

புதுச்சேரி: வேல்ராம்பட்டு, எக்ஸ்க்ளூசிவ் அகாடமி சார்பில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
அகாடமி நிறுவனர் ப்ரீத்தி விஜயகுமார் வரவேற்றார். ஓய்வு பெற்ற சுங்கத்துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு மாறுவேடம், ஓவியம், கையெழுத்து, பாட்டு, கேரம், செஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
ஆசிரியர் பயிற்சி பெறும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிக்கு கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் தலா ரூ. 100 வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பூங்கோதை, சூரியநாராயணன், விஜய விவேஷ்குமார், விஜய விஜேஷ்குமார், ஆசிரியர் பயிற்சி மாணவிகள் நித்யா, புவனா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.