கலை நிகழ்ச்சியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
கலை நிகழ்ச்சியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஏப் 29, 2026 04:33 AM

வில்லியனுார்: புளூ ஸ்டார் ஆங்கில பள்ளியில் 'ஸ்கில் சபாரி' என்ற தலைப்பில் நடந்த தனித்திறன் மேம்பாட்டு கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த 'ஸ்கில் சபாரி' நிகழ்ச்சியில் மழலையர் வகுப்பு முதல் 9ம் வகுப்புரையிலான மாணவர்களுக்கு,இரண்டு நாட்கள் பாட்டு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று, தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் வரலட்சுமி முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக மாநில என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரி சதீஷ்குமார், ஆசிரியர்கள் சண்முகபிரியா, சோமசுந்தரம் மற்றும் அஸ்மத்துல்லா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளி துணை முதல்வர் சாலை சிவ செல்வம் நன்றி கூறினார். மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
