/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுடு களிமண் வடிவமைப்பு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
சுடு களிமண் வடிவமைப்பு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
சுடு களிமண் வடிவமைப்பு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
சுடு களிமண் வடிவமைப்பு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜன 08, 2024 05:03 AM

புதுச்சேரி: தேர்தல் துறையின் சுடுகளிமண் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சுடு களிமண் சிறப்பு வடிவமைப்பு பட்டறை மற்றும் போட்டி, முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் நடந்தது.
இதில், ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிற்ப போட்டியில் 498 பேர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளி பிரிவில் முதல் பரிசு ராமானுஜம், இரண்டாம் பரிசு பழனிவேல், மூன்றாம் பரிசு லட்சுமி, ஆறுதல் பரிசு இயல்யா, சுபித்ரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பிரிவில் முதல் பரிசு ஸ்ரீதர், இரண்டாம் பரிசு புருஷோத்தமன், மூன்றாம் பரிசு வீரச்செல்வம், ஆறுதல் பரிசு தமிழ்ச்செல்வி, மல்லிகாவுக்கு வழங்கப்பட்டது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் முதல் பரிசு மார்கண்டன், இரண்டாம் பரிசு ராஜ கண்ணன், மூன்றாம் பரிசு கணபதி, ஆறுதல் பரிசு ரகுபதி, ராமச்சந்திரவதனிக்கு வழங்கப்பட்டது.
கல்லுாரி மாணவர்கள் பிரிவில் முதல் பரிசு ஹரிகிருஷ்ணா, இரண்டாம் பரிசு விக்ரம், மூன்றாம் பரிசு சரஸ்வதி, ஆறுதல் பரிசு பாலகிருஷ்ணன், துர்காவிற்கு வழங்கப்பட்டது.
தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தில்லைவேல், ஆதர்ஷ், முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி ஆகியோர் ரொக்க பரிசுகளை வழங்கினர்.
இந்த சிற்ப வடிவமைப்பு பட்டறை, பொது மக்களிடையே வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், திருத்தல் நடைமுறைகளில் தவறாமல் பங்கு பெறுதல், நேர்மையான முறையில் ஓட்டளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்டது.