/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் கிரிக்கெட் லீக் போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
/
ஜிப்மர் கிரிக்கெட் லீக் போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
ஜிப்மர் கிரிக்கெட் லீக் போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
ஜிப்மர் கிரிக்கெட் லீக் போட்டி வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 24, 2025 03:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் அரங்கில் நடந்த ஜிப்மர் டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக், சீசன்- 1 போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் சங்கம் சார்பில், ஜிப்மர் டென்னிஸ் பால் கிரிக்கெட் லீக் சீசன்- I போட்டி ஜிப்மர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குனர் வீர் சிங் நேகி, மருத்துவ மேற்பார்வையாளர் நாராயணன் துரைராஜன் முன்னிலை வகித்தனர்.
துணை இயக்குநர் ரங்கபாஷியம், மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங், ஜிப்மர் ஊழியர் சங்க தலைவர் தமிழ்வாணன், பொதுச்செயலாளர் வேலு, பொருளாளர் மாசிலாமணி, துணைத் தலைவர் தென்றலரசன், இணைச் செயலாளர் பெட்டின் அந்துவன் கலந்து கொண்டனர்.
போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின. முதல் பரிசு பெற்ற வின்சிபிள் அணிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாவது பரிசு பெற்ற ஜிப்மர் ராயல்ஸ் அணிக்கு ரூ.7,000, மூன்றாம் பரிசு பெற்ற ஜிப்மர் ஷேடோஸ் மற்றும் ஜிப்மர் சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு தலா ரூ. 5,000 பரிசு வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஜிப்மர் அமைப்புச் செயலர் நீலவண்ணன், உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் சின்மயி சிரஞ்சன் பாணிக்ரஹி ஆகியோர் செய்திருந்தனர்.