தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கேலோ இந்தியா தேக்வாண்டோ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கேலோ இந்தியா தேக்வாண்டோ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கேலோ இந்தியா தேக்வாண்டோ வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : மார் 04, 2024 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த கேலோ இந்தியா தேக்வாண்டோ மகளிர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கேலோ இந்தியா தேக்வோண்டோ மகளிர் விளையாட்டு போட்டிகள், உப்பளம், ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில், கடந்த, பிப்.27,ம் தேதி துவங்கியது.

இதில் கேடட், ஜூனியர், சீனியர் என்ற பிரிவுகளில், 50க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளில், போட்டி நடந்தது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீராங்கனையர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதன் நிறைவு விழாவில், முதல்வர் ரங்கசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவியருக்கு, சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை இயக்குநர் செந்தில்குமார், துணை இயக்குநர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us