sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு

 கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு

 கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு


ADDED : மார் 10, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தட்டாஞ்சாவடி அரசு துவக்க பள்ளியில் 2025--26கல்வி ஆண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா நோக்கவுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஊர் தலைவர்கள் ஞான சேகர், மூர்த்தி, மணி, நித்தியானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், அழகிய கையெழுத்திற்காக ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்ணை குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us