/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விடுதலை தின போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
விடுதலை தின போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 01, 2024 05:47 AM

புதுச்சேரி : புதுச்சேரி விடுதலை தின கட்டுரை, ஓவியப்போட்டியில் வென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி முதல் பிரஞ்சு கவர்னர் பிரான்சுவா மர்த்தேன் 317 வது நினைவு தினம் மற்றும் புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதுச்சேரி அருங்காட்சியகம் சார்பில் தமிழ் சங்கத்தில் நடந்தது.
பேராசிரியர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். புதுச்சேரி அருங்காட்சியக ஆராய்ச்சி நுாலக இயக்குநர் அறிவன் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணை போக்குவரத்து ஆணையர் சுந்தர சந்திரகுமரன் கலந்து கொண்டு கட்டுரை, ஓவியப்போட்டியில் வென்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் தலைமை ஆசிரியர் பசுபதிராசன், கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினர்.
ஏற்பாடுகள் புதுச்சேரி அருங்காட்சியகம், தேசிய மரபு அறக்கட்டளை இணைந்து செய்திருந்தனர்.
நுாலக மேலாளர் மனோரஞ்சினி, திருநாவுக்கரசு, தீபிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.