/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு
/
அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு
அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு
அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு
ADDED : மார் 16, 2024 06:07 AM

புதுச்சேரி: அரசு பெண்கள் துவக்கப் பள்ளி ஆண்டு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசு வழங்கினார்.
புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில், அமைச்சர் லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வட்டம் 1, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் உரையாற்றினார். தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆண்டறிக்கை வாசித்தார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பரிசு வழங்கினார். பள்ளி மாணவியரின் திறமையை வெளிப்படுத்தும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
விழாவில், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவியர், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.