தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஆக 26, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புளு ஸ்டார் ஆங்கில பள்ளியில்  நடப்பாண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கிய மேல்நிலைப் பள்ளியில் 41வது ஆண்டு விளையாட்டுப் போட்டி நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளி நிறுவனர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் சிவசெல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமரன் மற்றும் பள்ளி முதல்வர் வரலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டினர்.

 மாநில அளவில் தடகளப் போட்டிகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்கள் பாலமுருகன் மற்றும் ஆஜய்சந்தோஷ் ஆகியோரை கவுரவபடுத்தி பாராட்டினர். மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள், உடற்கல்வி பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us