/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழில் பெயர் பலகை வலியுறுத்தி ஊர்வலம்
/
தமிழில் பெயர் பலகை வலியுறுத்தி ஊர்வலம்
ADDED : ஜூலை 06, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி - காரைக்கால் தமிழ் உரிமை இயக்கம் சார்பில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது.
ஊர்வலம் நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே புறப்பட்டது. ஊர்வலத்தை தமிழ் உரிமை இயக்க நெறியாளர் தமிழ்மல்லன் தொடங்கி வைத்தார். இயக்க தலைவர் பாவாணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மங்கையர் செல்வன் நோக்கவுரையாற்றினார்.
இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருசக்கர வாகனங்களில் கோரிக்கைகள் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.